me-1

Current STATUS of Mechanical Engineers

DEAR MECHANICAL ENGINEERS & THEIR PARENTS!

சமீப காலமாக தொழில் துறையில் “EMPLOYABILITY” என்ற ஒரு சொல் உச்சரிக்கப் பட்டு வருகின்றது. “EMPLOYABILITY” என்றால் வேலை செய்ய தகுதி என்று பொருள். எல்லா நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணி புரிய தகுதியான நபர்களை மட்டுமே தேடுகிறார்கள். அவர்கள் கருதும் குறைந்த பட்ச தகுதி என்பது அடிப்படை இன்ஜினியரிங் அறிவு மற்றும் அவர்கள் அனுபவத்துகேற்ற துறை சார்ந்த அறிவு மட்டுமே.
ஆனால் படித்து முடித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் இது பற்றி அறியவோ புரிந்துகொள்ளவோ செய்வது இல்லை. கல்லூரி முடித்து வெளியே வந்தவுடன் அவர்கள் வேண்டுவது எல்லாம் வேலை & சம்பளம் மட்டுமே. படித்து முடித்து பட்டம் பெற்ற இளைஞர்கள், தங்கள் கையில் உள்ள DEGREE or DIPLOMA சான்றிதழ்கள் மட்டுமே வேலையைப் பெற்று தந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய வேலை வாய்ப்பு நிலை அதுவல்ல. மேலும் ஆண்டொன்றிற்கு சராசரியாக 60000 Mechanical Engineering Graduates and 40000 DME பட்டம் பெற்று வெளி வருகிறார்கள். ஆனால் வேலை வாய்ப்பு 10% மட்டுமே உள்ளது.
எனவே அவர்கள் தங்களுடன் படித்தவர்களுடன் போட்டி போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்களுக்கு தான் தேடும் வேலை சார்ந்த அறிவு, திறமை, சிபாரிசு அல்லது பணம் தேவை படுகிறது. சிபாரிசு அல்லது பணம் மிக சிலரிடம் மட்டுமே இருக்கும். தான் தேடும் வேலை சார்ந்த அறிவு, திறமை என்பது அவர்கள் படித்த படிப்பிலிருந்து போதுமானதாக இல்லை. பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் படிக்கும் போது மதிப்பெண்களில் கவனம் செலுத்தும் அளவிற்கு விஷயங்களை புரிந்து கொள்வதில் செலுத்துவதில்லை. அது அவர்களின் தவறு இல்லை. கல்வி முறையில் உள்ள நிலைமை மற்றும் போட்டி.

வகுப்பறையை பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும்,
பாடம் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும்,
தேர்வு எழுதுவற்கும் பதில் அளிப்பதற்கும்
உள்ள வேறுபாட்டின் ஆழம் பெரும்பாலான மாணவர்களுக்கு புரிவதில்லை.
கல்லூரி பருவம் என்பது விளையாடவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு உள்ள காலம் என்று கருதுகிறார்கள்.
மாறாக தங்களின் எதிர் காலத்திற்கு நல்லதொரு அடித்தளம் அமைக்க மிக சிறந்த காலமும் அதுதான் என்பதை (அவர்களுக்கு தெரிந்திருந்தாலும்) அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
தங்கள் பெற்றோரின் கனவுகள் மற்றும் நிஜ வாழ்க்கையில் தாங்கள் எதிர் கொள்ள இருக்கும் போட்டிகள் பற்றிய உண்மைகள் பெரும்பாலான மாணவர்கள் அறிந்திருப்பதில்லை.

CAD படித்த பெரும்பாலான மாணவர்கள் தங்களை Designer என்று கூறிக் கொள்கிறார்கள். Drafting மற்றும் Designing இடையேயான வேறுபாடு அவர்களுக்கு தெரிவதில்லை. Drafting என்பது ஏற்கனவே Design செய்யப்பட்ட ஒன்றை வரைவது. ஆனால் Design என்பது ஒரு தேவையின் அடிப்படையில் வடிவமைப்பது. எனவே ஒருவர் Designer ஆக வேண்டுமென்றால் Drafting Software போக Concept, Calculations, Application போன்றவற்றையும் அவர் கற்று கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் Drafter ஆகவே அவர்கள் வாழ்க்கை முடிந்து விடும்.

ஒருவர் Engineer என்கிற நிலைக்கு வர STUDENT – CANDIDATE – ENGINEER
என்கிற 3 படிகளைக் கடக்க வேண்டியுள்ளது. STUDENT என்பவருக்கு நல்ல % மார்க் இருந்தால் போதும். CANDIDATE என்பவருக்கு Interviewக்கு வந்திருப்பவர்களில் மற்றவரகளை விட தான் சிறந்தவர் என்று காட்டிக்கொள்ள அவர் தேடும் வேலைக்கு தேவையான அடிப்படை அறிவு தேவை. ஆனால்
ENGINEER என்பவருக்கு அவர் தேடும் வேலைக்கு தேவையான அடிப்படை அறிவு மற்றும் உடன் வேலை செய்பவருடன் போட்டி போட்டு அந்த வேலையை தக்க வைத்துக்கொள்ள, அவர் வேலை செய்யும் நிறுவனம் தயாரிக்கும் பொருளின் உற்பத்தி முறையைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த நிலையை வென்று
தான் 10ல் ஒன்று அல்ல 10ல் முதல் என்று நிரூபிக்க
அவர்களுக்கு போதுமான வழிக் காட்டுதல் இல்லை. பல மாதங்கள் வேலை தேடியும் வேலை கிடைக்காமல் தோல்வி அடைவதன் காரணம் அறிய அவர்கள் விரும்புவதோ முயற்சிப்பதோ இல்லை.

உண்மையிலேயே அவர்கள் மிகவும் சிரம பட்டு வேலைதேடிக் கொண்டிருக்கிரார்கள். இதில் வேதனை என்னவென்றால் இந்த நிலைப் பற்றி சிறிதளவும் அவர்களின் பெற்றோருக்கு தெரிவதில்லை அல்லது தெரியப் படுத்துவதில்லை. இது பற்றி அவர்களது பெற்றோரிடம் சொல்ல தயக்கம் மற்றும் பயம். 3 / 4 வருடங்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து படித்தும் வேலைக் கிடைக்க வில்லை, மேலும் பயிற்சி தேவை படுகிறது என்று சொல்ல கூச்சமாகவும் குற்ற உணர்வும் ஏற்படுகிறது. எனவே யாரிடமும் தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளாமல் தாங்களாகவே வேலை தேடிக் கொள்ள முயற்சிச் செய்து தோற்று போகிறார்கள். Interviewக்கு சென்று வேலையில்லாமல் திரும்பும் அவர்கள் உண்மையை சொல்வதில்லை. மாறாக Company மேலேயே பழியைப் போட்டு விடுகிறார்கள். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் பெரும்பாலானவர்கள் தாங்கள் விரும்பிய வேலையிலோ கம்பனியிலோ வேலைக்கு சேருவதில்லை. எந்த கம்பனியில் என்ன வேலைக் கிடைக்கிறதோ சேர்ந்து விடுகிறார்கள். பின்னர் அந்த வேலை பிடிக்காமல் வேறு வேலைக்கு தாவ முயற்சிக்கிறார்கள்.

இதில் பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரியத் தவறு என்னவென்றால்
தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது காட்டுகிற அக்கறை,
அவர்களுக்கு டியூஷன் ஏற்பாடு செய்யும் போது காட்டுகிற அக்கறை,
கவுன்செலிங் போகும் போது காட்டுகிற அக்கறையும் ஆர்வமும்,
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது காட்டுகிற அக்கறை, கல்லூரியில் சேர்த்தவுடன் அவர்கள் வழியை அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் நின்று போகிறது.

உண்மையிலேயே மேலும் சில பொறுப்புக்கள் மீதம் உள்ளன என்பதை அவர்கள் மறந்து போகின்றனர். டிகிரி அல்லது டிப்ளோமா செர்டிபிகேட் உடன் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்கான மற்றும் வேலையில் நீடிப்பதற்கு தேவையான அடிப்படை பயிற்சி மற்றும் அறிவு கட்டாயமாக தேவை என்பதை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் உணர்வதே இல்லை.

மாணவர்கள் தங்கள் நிலையை பற்றி தங்கள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள கூச்சப் படவோ தயங்கவோ தேவையே இல்லை. மற்றும் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு உதவ முடியும். உதவ வேண்டும்.

எனவே அவர்கள் தங்கள் பெற்றோருடன் கட்டாயம் ஒரு கலந்தாய்வுக்கு
தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

SNCL4ME

SNCL4ME stands for essentials for mechanical engineers which provides the details which are needed essentially. It is a digital hand book which has the all the details a mechanical engineers need to know. It gives the information about the current terminology used in mechanical industries. It provides engineering calculations, standard tables and conversion tables. It can be installed in your android mobiles and you can use it whenever needed. SNCL4ME helps to work smarter and you dont need to search for standard tables and chart for values and you can use this app in offline mode.

app

categories

head_down

basic-engg

stand-table

standard-table

stand-table

BASIC ENGINEERING

head_down

ENGINEERING DRAWING

ED1

ED2

ENGINEERING CALCULATIONS

EC1

EC2

EC3

FITS

TOLERANCE

GEOMETRICAL SYMBOLS

GS1

GS2

SURFACE ROUGHNESS

SR

SURFACE ROUGHNESS

SR

MATERIAL & APPLICATION

M

HEAT TREATMENT

HT

WELDING

NDT

NDT

SURFACE COATINGS

PROCESS ENGINEERING

head_down

MEASURING INSTRUMENTS

measuring

CUTTING TOOL

cutting

MACHINERIES

machinery

STANDARD TABLES

head_down

TOLERANCES-HOLES

TOLERANCES-SHAFT

GENERAL TOLERANCE

RA TABLE

TAP DRILL

SWG TO MM

HARDNESS CONVERSION TABLE

standard

CALCULATIONS

head_down

WEIGHT

weight

TRIANGLE

triangle

PITCH CIRCLE DIAMETER (PCD)

pcd

CUTTING SPEED (Vc)

TAPER TURNING

calc

price

Essential For Mechanical Engineers SNCL4ME

– Rs 500/-